தரப்பரிசோதனையில் அதிக எண்ணிக்கையான மருந்துகள் தோல்வி!
அதிக எண்ணிக்கையான மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த ஆண்டாக 2023 பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் (2023) இதுவரை மொத்தம் 115 மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது.
தரப் பரிசோதனையில்
மேலும், இந்தத் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 58 மருந்துகள் இந்தியாவிலும், 45 மருந்துகள் உள்நாட்டிலும் தயாரிக்கப்பட்டுள்ளன, ஏனையவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை எனவும் மருந்து விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தவிரவும், மொத்தம் 35 Flucloxacillin Cap மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது, இந்த மருந்து இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 600 மருந்துகள் தரக் குறைவான மருந்துகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவான இறப்புகள்
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தன, அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டில் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தன.
அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையாக 115 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்து அதிக எண்ணிக்கையினைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு மருந்துப் பிரச்சினையால் அதிகளவான இறப்புகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |