பிரேசில் விமான விபத்தில் 12 பேர் பலி
Brazil
Plane Crash
By Kathirpriya
பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே, ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்ளடங்கலாக12 பேரும் பலியாகியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்னவென்பது இதுவரை சரியாக தெரியாது என்பதனால், இது தொடர்பாக விரிவான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் நடந்த 2ஆவது விபத்தாக இந்த விபத்து விளங்குகின்றது , அதுமாத்திரமன்றி, கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 13 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
21 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்