இன்று இரவு ஏற்பட்ட விபத்து ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த 12 பேர் படுகாயம்
By Sumithiran
ரந்தெனிகல சாலையில் இன்றிரவு ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பயணிகள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்து வீதியில் உள்ள பாறையில் மோதியதில் அதில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைகளுக்காக கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
