இன்றும் கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இரு கட்டங்களாக தலா 12 மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்துள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
சீரான நீர் விநியோகத்தைப் பேணும் நோக்கில், சுழற்சி முறையில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று (08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கலகெதர, இரிதா பொல, பின்னவல, வேவல்பனாவ, பிடும்பே, மீப்பே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போப்பே, மலகல.
மற்றும், கஹவல, மில்லவ, கொட்டியங்கொட, போரகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
வறட்சியான வானிலை தொடர்வதால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், அத்தியாவசியத் தேவைகளுக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |