கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு
Gampaha
Sri Lanka
By Beulah
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) 12 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுதப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு நடைமுறைப்படுதப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பிரதேசங்கள்
இதற்கிணங்க, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க - சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுதப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் நீர்வெட்டு நடைமுறைப்படுதப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி