12 வயது சிறுமி மீது துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் கைது
Srilanka
girl
Arrested
Gunfire
Haputale
Local made gun
By MKkamshan
ஹப்புத்தளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொண்டு, 12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை - கொஸ்லாந்தை - கெலிப்பனவளை பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்
