120 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! வெளியாகிய பெரும் மோசடி பின்னணி
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, இணையவழி நிதி மோசடிகள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சோதனையின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அத்தோடு, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பல தளங்களை வாடகைக்கு எடுத்து இந்த இணையவழி மோசடி வலையமைப்பை இவர்கள் நடத்தி வந்துள்ளது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது சில சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |