மேல் மாகாணத்தில் மட்டும் 122 பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை
Sri Lanka Police
Western Province
Sri Lankan Schools
By Sumithiran
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய விசேட போதைப்பொருள் நடவடிக்கையில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, 122 பாடசாலைகளை உள்ளடக்கிய நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள்கள்
இரண்டு கிலோகிராம் 148 கிராம் மெத், ஒன்பது கிராம் மற்றும் 375 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கிராம் மற்றும் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் பத்து மாத்திரைகள் ஆகியவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சோதனைகள் தொடரும்
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இலக்கு வைத்து இந்த சோதனைகள் தொடரும் என காவல்துறை அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்