உத்தேச புதிய அரசியலமைப்பில் '13' நீக்கம்? கசிந்தது தகவல்
இலங்கையின் உத்தேச புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளிவந்துள்ளது.
13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை முழுமையாக நீக்கப்படுவதோடு, தற்போது பணியாற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் தற்போது பணியாற்றும் துறையின், மத்திய அரச நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நகல் வடிவைத் தயாரிப்பதற்கு 14 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் நியமித்திருந்தது.
குறித்த நிபுணர் குழு நீண்டகால கலந்தாய்வுகளின் பின்னர் நகல் படிவம் ஒன்றை அரச தலைவரிடம் கையெழுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த நகல் வடிவத்திலேயே மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிரும் மாகாணசபை முறைமை முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
