பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Sri Lankan Tamils London Mullivaikal Remembrance Day
By Kiruththikan May 19, 2022 09:34 AM GMT
Report

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது.

நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.

18.05.2022 அன்று மாலை 6.00 மணி அளவில் நினைவேந்தலில் முன்றலில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமானது.

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

அதனைத்தொடர்ந்து பிரித்தானிய கொடியினை திரு.புஸ்பராஜா அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானியாவின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு.வீரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவோசை ஒலிக்க பிரதான நினைவுச்சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது கணவனையும் பிள்ளையையும் பறிகொடுத்த திருமதி இரஞ்சினி பாலச்சந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இறுதி யுத்தத்தில் தனது தந்தையை பறிகொடுத்த செல்வி கண்ணம்மா தனது உணர்வுகளை அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுவனான செல்வன்.ஆதி அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை உரையாக தொகுத்து வழங்கினார்.

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

தொடர்ந்து ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் திரு.சென் கந்தையா அவர்கள் வழங்கி வைக்க , ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் சமகால அரசியலையும் தழுவி உரையினை வழங்கினார்.

அதே நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டது.

" நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற நம்பிக்கை பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.

இந்நிகழ்வானது எமது தாயக விடுதலை அடையும் வரையும் எமது இனவழிப்புக்கு நீதி கிடைக்கும் வரையும் எமது பயணம் தொடரும் என்பதனை சுட்டி காட்டும் வகையில் அமைந்திருந்தது. 

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | 13 Year Mullivaikkal Remembrance Day Britain

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026