18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
Russia
By Sathangani
இலங்கைக்கு பெப்ரவரி மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ரஷ்யாவில் இருந்து அதிகம்
ரஷ்யாவில் இருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவில் இருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்