எந்த தார்மீக உரிமையும் அவர்களுக்குக் கிடையாது - இந்தியாவையும் சீண்டும் சரத் வீரசேகர!
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை

இவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கே மக்கள் ஆணை வழங்கினார்கள் என்பதனால் சிறிலங்கா அதிபர் அதுகுறித்தே அவதானம் செலுத்த வேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
ரணிலின் உறுதிப்பாடு

மேலும் வடக்கு கிழக்கு மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவதானம் செலுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட்டாலும் காவல்துறை அதிகாரத்தில் மாற்றமில்லை என கூறும் அதிபரின் உறுதிப்பாடு எவ்வளவு நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.