காவல் நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
காவல் நிலையங்களில் குவிந்துள்ள பல்வேறு முறைப்பாடுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய(Priyantha Weerasuriya) உத்தரவிட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Talduwa)தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளை நாளை (07) தொடக்கம் 14 நாட்களுக்குள் விசாரிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் சகல உயர் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தல்துவா தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் விசேட கடமை
கடந்த தேர்தல் காலத்தில் 65,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் விசேட கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அந்த காலப்பகுதியில் நாட்டிலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு முறைப்பாடுகள் குவிந்திருந்ததை பதில் காவல்துறை மா அதிபர் அவதானித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தல்துவா மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி