மடகாஸ்கார் தீவில் காலநிலை மாற்றத்தினால் பலியான உயிர்கள்
Africa
World
Madagascar
By Laksi
ஆப்பிரிக்க கண்டத்தின் மடகாஸ்கர் தீவிலுள்ள கமனே பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப் பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதன்போது, மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியுள்ள நிலையில் அங்குள்ள 9 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
தேடும் பணி
மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கமனே நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இதன்போது, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி