நீர்க்கட்டணத்தில் 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை
Sri Lanka
Water Board
By Sathangani
நாட்டில் நீர் பாவனையாளர்களினால் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கட்டணம் செலுத்தவில்லை
இலங்கையிலுள்ள மொத்த நீர் பாவனையாளர்களில் 50% இற்கும் குறைவானவர்களே உரிய திகதிக்கு முன்னர் பணத்தை செலுத்துவதாகவும் வடிகாலமைப்புச்சபை கூறியுள்ளது.
மேலும், சில பாவனையாளர்கள் கடந்த ஒரு வருடமாக கட்டணங்களை செலுத்தவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அத்தகைய பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்