தடுப்பூசி தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் விரைவில் புதிய செய்தி - இராணுவத் தளபதி
vaccine
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் 15 - 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) வழங்குவார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
12 - 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 15 - 19 வயதிற்கு இடைப்பட்ட சகலருக்கு தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் 12 - 15 வயதிற்குட்பட்ட நோய்களால் பாதிக்கப்படாத ஆரோக்கியமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.