பெருந்தொகை இந்தியர்கள் அதிரடி கைது! இலங்கையில் வரலாற்று சம்பவம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (DIE) இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி, விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.
இது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய சட்டவிரோத குடிநுழைவுச் சம்பவமாக குறிப்பிடப்படுகிறது.
இவர்கள் வழங்கிய விசா கட்டணங்கள் மற்றும் அபராதங்களாக ரூ.33.6 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளது.
உடனடி நாடு கடத்தல்
கொழும்பிலுள்ள ஒரு கட்டிடத்தில் சர்வதேச இணையவழி விளம்பர மற்றும் சூதாட்டச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஐ.டி நிறுவனம் இயக்கிய பின்தள அலுவலகத்தை சுற்றிவளைத்த போது குறித்த சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் 25 – 45 வயதுக்குள் உள்ள ஆண்கள். இவர்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை வீசா காலத்தை மீறி வேலை செய்துள்ளனர்.
இந்த நிலையில், வெலிசர ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் உள்ளதால், இந்த 155 பேரையும் அங்கு தற்காலிகமாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவருக்கும் உடனடி நாடு கடத்தல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வருமானம்
இதேவேளை, இந்த சம்பவம் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரே நாளில் அதிகபட்ச வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது வரலாறு காணாத அளவிலான சட்ட நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போல சட்டவிரோதமாக நாட்டில் தங்கும் வெளிநாட்டு பிரஜைகள் மீது DIE இப்போது கடுமையாக கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
