மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ள 16 எம்பிகள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றிக்கு தெரிவான 16 பேர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
கட்சியில் இணைவது தொடர்பில்
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோரும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் குறித்த 16 பேரும் மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்