தயாசிறி கட்சியில் இணைந்தாலும் பதவிகள் வழங்கப்படாது: மைத்திரி வலியுறுத்து
தயாசிறி ஜயசேகர எந்த நேரத்திலும் கட்சியோடு இணைந்து கொள்ளாலாம் ஆனால் அவருக்கு பதவிகளை வழங்குவதில் நம்பிக்கை இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (24) கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தயாசிறி விரும்பினால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எந்த நேரத்திலும் கட்சியில் சேர்ந்துக் கொள்ளலாம் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கலந்துரையாடல்
கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானம் தொடர்பில், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு முன்னாள் அதிபர் விரிவாக உண்மைகளை விளக்கியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்