இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! நால்வருக்கும் 100 கோடி பரிசு
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லொட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பரிசு வென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லொட்டரி விற்பனை அமோகமாக நடப்பாண்டில் நடந்தது.
இதில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆகும். இரண்டாவது பரிசு 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாவது பரிசு 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர்
இந்த நிலையில், ஓணம் லொட்டரியில் ரூ.25 கோடி பம்பர் பரிசை தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகிய 4 பேரும் கூட்டாக வாங்கிய டிக்கெட்டிற்கு தான் இந்த பரிசுத்தொகை விழுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள லொட்டரி அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டை கொடுத்து பரிசுத்தொகை பெற்று இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
YOU MAY LIKE THIS