அமெரிக்காவில் பதிவாகாத 16ஆயிரம் கொரோனா மரணங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் 6 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவுகள் கூறுகின்றன.
இந்தநிலையில் அங்கு வைத்தியசாலைகளில் கொரோனாவினால் இறந்த 16 ஆயிரம் பேரின் இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் கரன் ஷென் வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது ஆய்வில், 20 மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 44 சதவீத கொரோனா பாதிப்புகளும், 40 சதவீத இறப்புகள் வைத்தியசாலைகளிலும் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார துறைகளில் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இது தேசிய தரவுகளில் சேர்க்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.