14 வயது மாணவியை கடத்திய சிறுவன் கைது: மட்டக்களப்பில் சம்பவம்
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது சிறுவன் ஒருவனை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(15) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளான்.
மேலதிக விசாரணை
அதனை தொடர்ந்து, கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும் நேற்று சொந்த இடம் திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி காவல்துறையினர் சிறுவனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்