சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடப்பட்ட 172 ஆமைக் குஞ்சுகள்
கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் நேற்று(30) இரவு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடப்பட்டுள்ளன.
கண்டகுழி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து ஆமைக் குஞ்சுகளாக மாறிய பின்னர் அவை கடற்கரையில் விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மாதம் ஆமை முட்டைகளை சேகரித்து பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டதன் பின்னர் 45 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து 172 ஆமைக் குஞ்சுகள் பிறந்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகள்
இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆமை பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று குறித்த ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டுள்ளனர்.
குறித்த கடலாமை அரியவகையான(Olive Ridley) மஞ்சள் நிறச் சிற்றாமை வகையச் சார்ந்தது என கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |