டித்வா சூறாவளி : காணாமற்போனோர் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lankan Peoples
Cyclone Ditwah
Disaster Management Centre
By Sumithiran
டித்வா சூறாவளியால் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 69 பேரும், கேகாலை மாவட்டத்தில் 38 பேரும் காணாமல் போயுள்ளனர். ஜனவரி 25 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட அந்த நிலையம், நுவரெலியா மாவட்டத்தில் முப்பத்திரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தால் 649 பேர் உயிரிழப்பு
இந்த அனர்த்தத்தால் 649 பேர் இறந்துள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 243 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 89 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர். 85 பாதுகாப்பு மையங்களில் 6,680 பேர் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி