ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்ஷன் கொல்லப்பட்டு 17 வருடங்கள் : யாழ்ப்பாணத்தில் நினைவு தினம் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் (Sahadeva Nilakshan) 17ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றைய (01) தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.
நினைவேந்தல்
ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.
2007 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை யாழ். நகருக்கு மூன்று மைல் தொலைவில் கொக்குவிலில் உள்ள நிலக்ஷனின் வீட்டிற்கு அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் யாழ்.பல்கலைக் கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |