எதிரியின் அடுத்த தோல்வி:அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக ட்ரோன் அழிப்பு:ஈரான் தெரிவிப்பு
அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17ஆவது ட்ரோன் வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அவருடைய குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
பல மாதங்களாக இந்த மோதல் நீடித்து வந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
மற்றுமொரு தோல்வி
எனினும், அவ்வப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதனை ஈரானும் தடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கு உட்பட்ட காஷிம் தீவின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் பறந்து வந்த அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17-வது ட்ரோன், வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
புதிய நவீன வான்வெளி பாதுகாப்பு சாதனம் உதவியுடன் அந்த ட்ரோன் தாக்கப்பட்டு உள்ளது. இது எதிரியின் தாக்குதல் திட்டத்தின் மற்றொரு தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |