புதுவருடத்தின் முதல்நாளிலேயே 18 பேரின் உயிர் பிரிந்த துயரம் - வடக்கில் மட்டும் ஐவர்
srilanka
accident
death
newyear
By Jaso
புதுவருடமான நேற்றையதினம் மட்டும் பல்வேறு விபத்துக்களில் சிக்கி 18 பேர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ(Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8 பேர் நேற்றைய தினம் (01) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
எஞ்சிய 10 பேரும், இதற்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில்,வவுனியாவில் மற்றும் முல்லைத்தீவில் விபத்துக்களில் சிக்கி ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி