முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் 18வது ஆண்டு நினைவேந்தல்!
முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஷ்வரனின் (T. Maheswaran)18வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இன்றையதினம் (01) குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் விஜிமருகன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன
நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்பத்தில் இறைவழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இறுதியாக, கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருகன், வாசுதேவக்குருக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |