கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா
Colombo
Sri Lanka
Festival
By Laksi
கொழும்பு (Colombo) - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 190 வது வருடாந்த திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
திருப்பலி ஆராதனைகள் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இன்று (13) கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் தமிழ் - சிங்கள மொழிகளில் நடைபெற்று வருகின்றது.
திருச்சொரூப ஆசிர்வாதம்
இதேவேளை, புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசிர்வாதம் இன்றிரவு (13) இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
