மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரைப் பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில், கால்நடைகள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படுகின்றமை தொடர்பில், கால்நடை பண்ணையாளர்களால், காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
துப்பாக்கி மீட்பு
இந்தநிலையில், வாழைச்சேனை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் (16) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் : கம்மன்பில வலியுறுத்து!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 15 மணி நேரம் முன்