அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு: காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் பலி
அம்பாறையில்(Ampara) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தரினால் இத்துப்பாக்கிச் சூடு இன்று(4) அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் இக்கினியாகல காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தர் உட்பட துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டகாவல் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் மாமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நால்வர் பலி
இதேவேளை மொனராகலை சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் பிரிவிற்குள் உள்ளடங்கும் கராண்டுகல உப காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தர்(42 வயது) ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதா அல்லது இதர காரணங்களினால் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு முன்னர் அந்த அதிகாரியால் 33 வயதான காவல் அதிகாரி, பெண் மற்றும் மகள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பின்னர் அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மற்றுமொரு துப்பாக்கிச் சூடு
இதேவேளை, செவனகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |