புகையிரத கடவை காவலர்கள் 2 நாள் பணிப்புறக்கணிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Railways
By Beulah Jan 04, 2024 03:03 PM GMT
Report

வாழ்வாதற்கான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் 2 நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

அதிபரின் வடக்கிற்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று ((04) காலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (06) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ள புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

சரியான ஊதியம் இன்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் புகையிரத கடவை காவலர்களாக கடமையாற்றி வருவதாக, முல்லைத்தீவு ஊடக மையத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் இரட்டை குண்டுவெடிப்பு : பின்னணியில் இஸ்ரேல்

ஈரானின் இரட்டை குண்டுவெடிப்பு : பின்னணியில் இஸ்ரேல்

ஒரு நாளைக்கான ஊதியம்

ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகையிரத கடவை காவலர்கள் 2 நாள் பணிப்புறக்கணிப்பு | 2 Day Strike By Railway Crossing Guards

காவல்துறையினரின் கீழ் கொத்தடிமைகளாக கடமையாற்றும் புகையிரத கடவைக் காவலர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வடக்கிற்கு 3 நாள் விஜயம் மேற்கொள்ளும் அதிபருக்கு அறிவிக்கவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ரொஹான் ராஜ்குமார், வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

நிரந்தர நியமனம்

காவல்துறையினரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத கடவை காவலர்கள் 2 நாள் பணிப்புறக்கணிப்பு | 2 Day Strike By Railway Crossing Guards

புகையிரத திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வரும் புகையிரத கடவை காவலர்களின் ஒன்றியம், சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழில்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்துகிறது.

கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை

கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021