ஈரானின் இரட்டை குண்டுவெடிப்பு : பின்னணியில் இஸ்ரேல்
ஈரானில் நினைவேந்தல் நிகழ்வின் போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்ட ஆண்டு நிறைவை ஈரான் அனுஷ்டித்து வந்நதது.
இந்நிலையிலேயே, அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டுடிவடிப்புக்களில், சுமார் 103 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
பயங்கரவாதத் தாக்குதல்
இச்சம்பவம் அரச ஊடகங்களாலும் பிராந்திய அதிகாரிகளாலும் பயங்கரவாதத் தாக்குதல் என முத்திரை குத்தப்பட்டது.
இதற்கிடையே, ஈரான் அதிபரின் அரசியல் பிரதிநிதி முகமது ஜம்ஷிதியும் இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
இதன்படி, இந்த தாக்குதலில் அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடான இஸ்ரேலோ ஈடுபட்டதாக கூறப்படுவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இதில் அமெரிக்கா எந்த விதத்திலும் தலையிடவில்லை. இந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக நம்புவதற்கு எங்களுக்கு எந்த காரணமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |