வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆபத்தான பொருட்கள் கண்டுபிடிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
World
By Dhilak
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக பல்வேறு நபர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபத்தி எட்டு இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.
ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனியில் இருந்து இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட 11 பொதிகளில் இந்த போதைப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருள் கையிருப்பு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |