முக்கிய அறிவிப்பு: யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்கள் மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.
வவுனியா - மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம்
அந்தவகையில் இன்று (02) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் நாளை (03) சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை குறித்த பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் உடனடியாக மீள வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |