சற்றுமுன் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
By Thulsi
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை
அரச நிறுவனப் பதிவாளர் நிதியிலிருந்து ரூ. 90 மில்லியனை மற்றொரு அரச நிறுவனத்தில் முதலீடு செய்து 59.5 சதவீதப் பலன்களைப் பெற்றது தொடர்பான புகார் குறித்த விசாரணைக்காக குணவர்தன அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டில் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் குறித்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் இன்று (02) காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்