கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (01.10.2026) கிளிநொச்சி, பூநகரி- கிராஞ்சி,செந்தாரகை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டிருந்தார்.
திடீர் வாக்குவாதம்
போட்டியின் போது இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கூட்டத்தைக் கலைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், வடமாகாண மட்டத்திலான இவ்வாறான முக்கிய விளையாட்டுப் போட்டியை உரிய அதிகாரம் இல்லாத குழுவிடம் ஒப்படைத்ததே குழப்பத்துக்கு முக்கிய காரணம் என போட்டியை பார்வையிட வந்த விளையாட்டு ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |