யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - வெளியான தகவல்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சுயேட்சைக் குழுக்களின் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் 46 வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று (11) நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
வேட்புமனுக்கள் நிராகரிப்பு
இந்த நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கவுள்ளன.
இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, கே.வி.தவராசா தலைமையிலான அணி மற்றும் அங்கஜன் இராமநாதன் முதலிய 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னி தேர்தல் தொகுதி
வன்னி தேர்தல் தொகுதியில் 6 உறுப்பினர்களுக்காக 423 வேட்பாளர்கள் வவுனியா நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயேச்சை குழுக்கள் உள்ளடங்களாக 47 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய 306081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் சுயேற்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி 51 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 47 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 423 பேர் போட்டியிடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |