ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் (Prevention of Organised Crimes) சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
இன்றைய (03) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே பிரதி சபாநாயகர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் தெரிவிப்பு
இதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் இன்னும் ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சட்டமூலத்துக்கு சாதாரன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாயின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |