குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இருபது ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள்
கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட சுமார் இருபது ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரதிபா மஹாநாம ஹேவா(Prathibha Mahanama Hewa) தெரிவித்தார்.
உதுலகம ஆணைக்குழு அறிக்கை(Udulagama Commission Report), மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை(Maxwell Paranagama Commission Report), லலித் அதுலத்முதலி கொலை ஆணைக்குழு அறிக்கை(Lalith Athulathmudali Assassination Commission Report), விஜய குமாரதுங்க கொலை ஆணைக்குழு அறிக்கை(Wijaya Kumaratunga Assassination Commission Report) மற்றும் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கொலை ஆணைக்குழு அறிக்கை(General Denzil Kobbekaduwa Assassination Commission Report) ஆகியவை செயல்படுத்தப்படாத சில அறிக்கைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரங்கள் இருந்தால் பரிந்துரைகளை செயல்படுத்த முடியும்
போதுமான ஆதாரங்கள் இருந்தால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த முடியும் என்றும் மஹாநாம ஹேவா கூறினார்.
இதற்கிடையில், இந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் இரண்டு பில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படலந்த ஆணைக்குழு அறிக்கை
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட படலந்த ஆணைக்குழு அறிக்கை மீது இரண்டு நாள் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அறிக்கை மீதான முதல் விவாதம் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது. இரண்டாவது விவாதத்தை மே மாதத்தில் பிற்பகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்