மானிய விலையில் உரப்பொதி - மகிழ்ச்சித் தகவல்
Government Of Sri Lanka
Sri lanka tea
NPP Government
By Thulsi
QR குறியீட்டு முறை மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட உள்ளது.
குறித்த திட்டம் இன்று (01.11.2025) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிய விலையில் உரப்பொதி
இதன்படி, பயனாளிகள் QR குறியீட்டைத் தயாரித்து தேசிய உரச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து உரத்தைப் பெறமுடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்கீழ் இன்று முதல், 50 கிலோ உரப்பொதி 4,000 ரூபாய் மற்றும் 25 கிலோ உரப்பொதி 2,000 ரூபாய் மானிய விலையில் விநியோகிக்கப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த உர மானியத்தை தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

20ம் ஆண்டு நினைவஞ்சலி