பிள்ளையான் விவகாரத்தில் ராஜபக்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அநுர
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் அவரின் குடும்பத்தின் மீது அரசு எந்த காலத்திலும் கை வைக்காது என மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடய்தை ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜபக்சாக்கள் மீது கைவைத்தால் அவர்கள் இன்னுமொரு பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்வார்கள்.
அதாவது, விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட எங்களை தண்டிக்க முற்படுகின்றார்கள் என தெரிவிப்பார்கள்.
இதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் அதனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க முற்படமாட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர் அரசியல் கைதுகள், தமிழர் அரசியல் தரப்பு, ராஜபக்சாக்களின் அரசியல் நகர்வு மற்றும் தற்கால அரசியல் தொடர்பில் அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
