2022 ராஜபக்சாக்களுக்கு உரியதல்ல -எதிரணி சூளுரை
2020
Rajitha Senaratne
rajapakshas
By Sumithiran
2022 ஆம் ஆண்டு ராஜபக்ஷக்களின் வருடம் அல்ல அது எங்களுடையது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி, நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் மறுசீரமைப்பு சஜித் பிரேமதாசவின் தலைமையில் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டபோராட்டத்தில் பங்கு கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி