சீன வாங்யீ பயண ராசியில் Go Home போராட்டங்கள்: 2022 கோட்டா கோ ஹோம்! 2026 -ஹரிணி கோ ஹோம்!
சிறிலங்கா பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி ராஜபக்ச அதிகாரமைய அல்லக்கை முகங்களில் ஒருவரும் சிறிலங்காவின் கடும் போக்கு அரசியல் தலைவர்களின் ஒருவருமான விமல் வீரவன்ச தலைமையில் நாளை Harini Go Home அல்லது ஹரிணியே வீட்டுக்குப் போ என்ற கருப்பொருளில் ஒரு போரட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கல்வி அமைச்சகத்திற்கு வெளியே காலவரையற்றவகையில் இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் 2026 இல் இலங்கையில் கால்பதிக்கும் முதலாவது வெளிநாட்டு உயர்முகமாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யின் நாளைய பயணம் மாறவுள்ளது.
இதில் அவதானிப்புக்குரிய ஒரு விடயமாக இலங்கையில் ராஜபக்ச அதிகாரமையத்தின் ஒரு அங்கமான கோட்டாவின் ஆட்சிக்கு எதிராக கோட்டா வீட்டுக்குப்போ என்ற போராட்டம் 2022 இல் முகை வெடிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இதே ஜனவரி மாதத்தில் இறுதியாக இலங்கைக்கு சென்றவர் இதே வாங் யி.
இப்போது 4 வருடங்களுக்கு பின்னர் அதே ஜனவரியில் அன்று போலவே அவர் இலங்கைக்கு செல்லும் நிலையில் 2022 இன் கோட்டா கோ ஹோம் (Go Home) போல எனப்படும் ஹரிணியே வீட்டுக்குப்போ Harini Go Home போரட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த விடயங்கள் எல்லாவற்றையும் தழுவிவருகிறது செய்திவீச்சு....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |