உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை!
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் (Richard Marles) நேரில் காண உள்ளமையினாலேயே இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விமான கண்காட்சி
மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 காவல்துறையினர் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.
மாபெரும் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பெட் கமிஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்