உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சாதனை
ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்த போட்டிகளில் 1.25 மில்லியன் ரசிகர்கள் கலந்து கொண்டது உலக சாதனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13 வது பதிப்பு இந்தியாவில் நடைபெற்றது.
கடந்த ஒக்டோபர் 5-ம் திகதி ஆரம்பமாகிய உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 19 ஆம் திகதி முடிவடைந்தது.
இறுதிப்போட்டி
10 அணிகள் கலந்து கொண்ட இத் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியும் அவுஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் மோதின.
இறுதிப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 240 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
மில்லியன் கணக்கான ரசிகர்கள்
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 241 ஓட்டங்களை பெற்று 6வது முறையாக உலகக் கோப்பையை வெற்றது.
இந்நிலையில் உலக கிண்ண இறுதிப்போட்டி இந்தியாவிலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தபோட்டியை 1.30 லட்சம் பேர் நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.
மேலும் 45 நாட்கள் நடைப்பெற்ற உலக கிண்ண தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
உலக சாதனை
இந்த நிகழ்வு உலக சாதனையாக மாறியுள்ளது.
இதற்கு முன்னர் 2015ல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1.016 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.
தற்போது அந்த உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதோடு கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக மாறியுள்ளது.
மேலும் இந்திய அணியின் ஆட்டங்களுக்கு அதிகமான ரசிகர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |