திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்! (காணொளி)
காசா இலக்குகள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
நெதன்யாகு மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் காசா ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது
அதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டையை 4 நாட்களுக்கு நிறுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
போர் நிறுத்த காலம்
போர் நிறுத்த காலத்தில், காசா பகுதியின் அனைத்து பகுதிகளிலும் யாரையும் தாக்கவோ அல்லது கைது செய்யவோ கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 150 பலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதற்கு பதிலடியாக ஹமாஸால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணயக்கைதிகள்
இது குறித்து நெதன்யாகு தெரிவிக்கையில், தங்கள் அன்புக்குரியவர்களை திருப்பி அனுப்புவது "புனிதமான மற்றும் உயர்ந்த பணி" என்று கூறினார்.
ஆனால், காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் இஸ்ரேலியப் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஹமாஸை ஒழிப்பது, எங்கள் பணயக்கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்புவது மற்றும் காசா இனி இஸ்ரேலை அச்சுறுத்தாது என்று அதன் இலக்குகளை அடையும் வரை இஸ்ரேல் நிறுத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
Prime Minister Benjamin Netanyahu, this evening, at the start of the Government meeting:
— Prime Minister of Israel (@IsraeliPM) November 21, 2023
While this meeting is to discuss the return of our hostages, I would like to start with something that should be self-evident: We are at war – and will continue the war. pic.twitter.com/YaICV89yEU
