மலர் நிலவு என அழைக்கப்படும் இன்றைய பௌர்ணமி தினம்!
Il Full Moon Poya
Vesak Full Moon Poya
NASA
Vesak2024
Vesak Day
By Shadhu Shanker
இன்று வானில் தோன்றும் முழுநிலவு Flower Moon என்று அழைக்கப்படுகிறது. மே மாதம் 23ஆம் திகதி, வியாழக்கிழமை பௌர்ணமி தினமாகும்.
இன்று முழு நிலவு வானில் தோன்றும். செவ்வாய்க்கிழமை இரவு முதல், வெள்ளிக்கிழமை மாலை வரை இந்த முழுநிலவு தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி, வானம் தெளிவாக இருக்குமானால், இந்த நிலவை காணலாம்.
இன்றைய பௌர்ணமி
இம்மாதத்தின், அதாவது, மே மாதத்தின் பௌர்ணமி நிலவு, Flower Moon அல்லது மலர் நிலவு என அழைக்கப்படுகிறது.
இம்மாதம் மலரும் மலர்களின் நினைவாக இம்மாத பௌர்ணமிக்கு மலர் நிலவு பூர்வக்குடியினரான அமெரிக்கர்கள்என பெயரிட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளில், ஜோதிடத்தில் இன்றைய நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்