பூமியை ஒத்த மற்றுமொரு கிரகம்...! அறிவியலாளர்கள் தகவல்
பூமியின் அளவோடு ஒத்து இருக்கும் அபூர்வமான கிரகத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ultra-cool நட்சத்திரத்தை சுற்றிவரும் exoplanet SPECULOOS-3 b என்கிற கிரகத்தை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகமானது பூமியின் அளவிலேயே உள்ளதால் காஸ்மிக் அளவில் (cosmic scales) பூமி மற்றும் இந்த கிரகத்தின் அளவு நெருக்கமாக உள்ளது.
அபூர்வமான கிரகம்
இந்த கிரகமானது நட்சத்திர சுற்றுப்புறத்தில் அதிக கிரகங்களை கண்டுபிடிப்பதற்கான வளர்ந்து வரும் திறனை எடுத்துக்காட்டுவதோடு பூமியிலிருந்து சற்று வேறுப்பட்டும் காணப்படுகின்றது.
பூமி தன்னையும் சூரியனையும் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரம் 365 நாட்கள் ஆகும். ஆனால், SPECULOOS-3 b கிரகம் தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 17 மணி நேரம் மட்டுமே எடுக்கின்றது.
எனவே, SPECULOOS-3 b கிரகத்தில் ஒரு வருடம் என்பது 17 மணி நேரம் மட்டுமே ஆகும்.
வருடத்திற்கு 17 மணிநேரம்
மேலும், இந்த SPECULOOS-3 b கிரகமானது அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதாகக் கூறப்படுவதோடு இதன் காரணமாக SPECULOOS-3 b அலை பூட்டப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
அதாவது, பகல்நேரம் என்று அழைக்கப்படும் கிரகத்தின் ஒரு பக்கம் தொடர்ந்து நட்சத்திரத்தை எதிர்கொள்வதால் நிரந்தரமாக பகல் வெளிச்சம் காணப்படுகிறது. இரவு பக்கமானது மூடப்பட்டிருக்கும்.
SPECULOOS (Search forhabitable Planets eclipsing ULtra-cOOl Stars) திட்டத்தால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதோடு ULtra-cOOl Stars -யை சுற்றி வாழக்கூடிய கிரகங்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது.
ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம்
இந்த நட்சத்திரங்கள் நமது சூரியனை விட சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதால் பூமியின் அளவிலான கிரகங்களை கண்டறிவதை எளிதாக்குகிறது.
இந்த கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் உயிர்களை ஆதரிக்கும் திறனைப் புரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |