மன்னாரில் கலைப்பிரிவில் சாதனை படைத்த மாணவி
Mannar
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sathangani
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை (G.C.E A/L Exam) பெறுபேறுகளில் மன்னார் (Mannar) மாவட்டத்தில் கலைப்பிரிவில் மாணவி ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி 3 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
சிறந்த பெறுபேறு
அத்துடன் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் (26) வெளியாகி இருந்தன.
அந்தவகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி